தானியேல் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ளும் பாடம் / Lessons from Daniel's life / பைபிள் மாந்தர்கள்/ தானியேல்/ Rev Jegan
தானியேல் வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொள்ளும் பாடங்கள்
1. No சொல்ல கற்றுக் கொள்ளுங்கள்
தேவனுக்கு பிரியம் இல்லாத காரியங்களை செய்வதற்கு யார் உங்களை கட்டாயப்படுத்தினாலும் No சொல்வதற்கு கற்றுக் கொள்ளுங்கள்.
தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம் பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னை தீட்டு படுத்தலாகாதென்று தன் இருதயத்தில் தீர்மானம் பண்ணிக்கொண்டு தன்னை தீட்டு படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக் கொண்டான் தானி1:8
2. எல்லா காரியங்களிலும் Compromise பண்ணுவது நல்லதல்ல
தானி1:8 ன்படி தானியல் பிரிதானிகளின் தலைவனிடத்திலே சமரசம் செய்து கொள்ள வில்லை .
3. உங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருங்கள்
தானி6:10 தானியலோவென்றால் அந்த பத்திரத்துக்கு கையெழுத்து வைக்கப்பட்டது என்று அறிந்த போதிலும் தன் வீட்டுக்குள்ளே போய் தன் மேல் அறையிலே எருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்க அங்கு தான் முன் செய்து வந்தபடியே தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்கால் படியிட்டு ஜெபம் பண்ணி தோத்திரம் செலுத்தினான்.
தனக்கு எதிராக பத்திரத்தில் கையெழுத்து போடப்பட்டுள்ளது என்று தெரிந்த போதிலும் தான் வழக்கமாக செய்து வந்த ஜெபத்தை விட்டுவிடாமல் தன் நிலைப்பாட்டில் தானியல் உறுதியாக இருந்தான்
4. நிதானமாய் நடந்து கொள்ளுங்கள்
தனக்கு எதிராக பத்திரத்தில் கையெழுத்து போடப்பட்டுள்ளது என்று தெரிந்த போதிலும் தானியல் நிதானமாய் நடந்து கொண்டான். எந்த ஆர்ப்பாட்டமும் செய்து கொள்ளவில்லை. அவனுடைய வழக்கமான வேலைகளை தொடர்ந்து செய்து வந்தான் அவனுடைய செயல்களில் எந்த மாற்றமும் இல்லை.
தானி6:10
5. தன்னை பெருமையாக காட்டிக்கொள்ளாமல் இருங்கள்
தானி6:22,23
சிங்கத்தின் கெபியில் இருந்து உயிரோடு வெளியே வந்த போது அவன் சொன்ன வார்த்தை அவனுடைய எளிமையை காட்டுகிறது. உயிரோடு வெளியே வந்தது ஒரு பெரிய விஷயமே இல்ல நான் உண்மையாக நடந்துகொண்டேன் எந்த குற்றமும் செய்யவில்லை அவ்வளவுதான் தேவன் என்னை காப்பாற்றினார் என்றான்.
6 தன் வாழ்வை நற்செய்தி ஆக மாற்றினான்
தானி6:26,27
தானியேலின் வாழ்வை பார்த்த தரியுராஜா தானியலின் தேவன் தான் உண்மையான தேவன் என்பதை அறிந்து கொண்டு தேசம் முழுவதும் தானியேலின் தேவனைத்தான் சேவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டான்.
By
Rev Jegan
Diocese of Tirunelveli
Comments
Post a Comment